




அனைவரையும் யா/மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய இணையத் தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம். நல்லை நகர் ஆறுமுக நாவலரின் தமிழ், சமய வளர்ச்சியில் ஆரம்பிக்கப்பட்ட சைவப்பிரகாச வித்தியாலயங் களில் ஒன்றாக 1875 ஆம் ஆண்டு யா/மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது. சதாவதானி நா.கதிரவேற் பிள்ளை, பாரதியின் ஞானகுருவான அருளம்பல சுவாமிகள் போன்ற தமிழ் அறிஞர் களும், ஞானிகளும் கல்வி கற்ற பெருமைக்குரியது. பிற்காலத்தில் வே.தா.சி. சிவகுருநாதன், கற்கண்டுப் பண்டிதர் பொன்.கிருஸ்ணபிள்ளை, கவிஞர் யாழ்ப்பாணன்(திரு.வே.சிவக்கொழுந்து), பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் ந.சண் முகலிங்கம், வை.கா.சிவப்பிரகாசம் போன்ற பெரியார்களையும் வளர்த் தெடுத்த பெருமைக்குரியது எமது பாடசாலையே. இவ்வாறு பல பெருமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள இக்கல்வித்தாயின் தற்போதைய வளர்ச்சி நிலைகள், கல்விநிலைகள், தற்போதைய மாணவர்களின் கல்விப் பாரம்பரியங்கள், மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் போன்ற வற்றை உலகெங்கும் பரந்துவாழ்கின்ற பழைய மாணவர்கள், கல்வியியலாளர் கள் போன்ற அனைத்துத் தரப்பினருடன் பகிர்ந்து கொள்வதை மையமாகக் கொண்டு இவ் இணையத்தளமானது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாடசாலையில் நிகழ்கின்ற நிகழ்வுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் போன்றவற்றை உடனுக்குடன் அறிந்துகொள்ளமுடியும் என நம்புகின்றோம். மேலும் இக் கல்வித்தாயில் கல்வி பயின்ற அனைவரையும் ஓரணியில் அணி திரட்டுவதற்காக பழையமாணவர் ஒன்றியம் கொழும்பு நகரில் செயற்பட்டு வருகின்றது. இவ் ஒன்றியத்தில் பழைய மாணவர்கள் ஒன்றிப்பதன் மூலம் பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளை மேம்படுத்தும் என நம்புகின்றோம். மேலும் உலகில் பரந்து வாழ்கின்ற பழையமாணவர்களை இணையத்தின் மூலம் ஒன்றிணைப்பதற்கு உங்கள் விபரங்களை எமக்கு வழங்கி ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என நம்புகின்றோம்.
சம சந்தர்ப்பம் மூலம் மாணவர்களின் ஆற்றல்களை மேலுயர்த்தி சமூகம் எதிர்பார்க்கும் விளுமயுயன்களைக் கொண்ட பண்பு விருத்தியுடன் கூடிய தரமான கல்வியை வழங்குவதன் மூலம் சமூக விருத்தியை மேம்படுத்துவோம்
பண்பு விருத்தியுடன் கூடிய தரமான கல்வியை வழங்கி எதிர்காலச் சவால்களை வெற்றிகொள்ளும் இயலுமையுடைய தரமான சமூகத்தை உருவாக்குதல்
திரு.மு.கனகலிங்கம்
முதலாவது நியமனத் திகதி :
தகைமை : M.Ed, B.A, Dip.in.Ed, Sci.Trd
இப் பாடசாலை நியமனத் திகதி :
